Thursday, February 14, 2019

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்


2019 ஆம் வருடத்திற்கு உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் அறிவுறுத்தல்களைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

https://www.doenets.lk/exam/docs/news/2019/Feb/Ad-Tamil.pdf




பரீட்சை நடைபெறும் இடங்களை அறிய இங்கே கிளிக் செய்க.






ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா (Smart Sri Lanka) திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பிரசன்ன வீரவர்தன நியமனம்

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா (Smart Sri Lanka) திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பிரசன்ன வீரவர்தன நியமனம்


ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
எரிக் பிரசன்ன வீரவர்தன இதற்கு முன்னர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இரணைமடு இடைக்கால அறிக்கை ஆளுநரிடம்

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு



கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

முழுமையான இலவச சுகாதாரத் சேவை

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்.ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆளுநர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாண செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாரதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் செல்வந்தர்களின் அரசாங்கம் என்று சிலர் கூறியபோதிலும் செல்வந்தர் அரசாங்கத்தின் வறிய மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள் அடிக்கடி பெற்றுக் கொடுக்கப்படுகிறது. மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையும் தற்போதைய அரசாங்கத்தினாலேயே . புரட்சிவாத அரசாங்கத்தினால் மருந்து விலை குறைக்கப்படவில்லை. தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்கள் மீட்கப்படவேண்டும். தற்பொழுது தொற்றாநோய் பாரிய சவாலாகும் என்று கூறினார்.